A site for Tamil Natural Language Processing, Web assisted Tamil learning, Sangam, Medieval and Modern Tamil research
Home
Text to Speech
Avini - Dialogue with Computer
Tamil learning
Tamil morphological tagger
Tamil Spell Checker
Sangam Search Engine
Read Sangam Verses in Context
Sangam Poems with Gloss
Translit: Tamil to Diacritics
Translit: Tamil to IPA
Translit: Roaman to Tamil
Convert Tamil Numbers
Tamil Robot
Unicode Tamil Sort order doc
about us
Listen to Me! - A Text to Speech Application for Tamil
Type or copy/paste Unicode Tamil text here.
உத்தமம் நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகக் கணினித் தமிழ் மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களை இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ளத் தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும். தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துத் தமிழ்க் கவிஞர் கனியன் பூங்குன்றனார் தன்னுடைய அழகான புறநானூறு பாடலில் இயம்பியிருப்பது போல "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்னும் வாக்கைச் சிறப்புற நடைமுறைப்படுத்தி வருவதில் உத்தமம் நிறுவனம் பெருமை கொள்கிறது. இம்மாநாடுகள் "நீர் வழிப் படூம் புணைபோல முறைவழிப் படூம் ஆருயிர்" என்னும் நம் கவிஞர் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க கணினி வழி தமிழர்களின் ஆருயிரை முறைவழிப்படுத்தி வருவது பெருமைக்குரிய ஒன்றே! இவ்வகையில் உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும்! நம் மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் கணினி குறித்துத் தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைவது எண்ணித் தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும். இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன் கல்வி நிறுவனங்கள், அரசு சார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுங்களுக்கும் உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய நாட்கள் ஆகியன குறித்தான செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் வெளியிடுவோம். மேலதிக செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம். நீங்கள் யுனிக்கோடு தமிழ் உரைகளை இங்கு ஒட்டி அவற்றை இங்கு படிக்க வைக்கலாம். இது இன்னும் முழுமைப் பெறவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது மிகப்பெரும் சவாலான காரியம் என்று எனக்குத் தெரியும். சாதாரண காரியம் அல்ல என்பதும் எனக்குத் தெரியும். அன்புடன், வாசு. vasur@sas.upenn.edu
Click here to listen to any Tamil Unicode Webstie